100, 700, 5000 ஆண்டுகள் வாழும் மரங்களின் இரகசியம்! – விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம் (The Secret Behind Trees That Live for 100, 700, and Even 5,000 Years – Scientists Reveal the Mystery)

 100, 700, 5000 ஆண்டுகள் வாழும் மரங்களின் இரகசியம்! – விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்!

இறைவனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட விலைமதிக்க முடியாத பரிசு — மரங்கள். ஆனால் அவற்றின் அருமையை உணராத மனிதன், தன் சுயநலத்திற்காக அவற்றை அழித்து வருகிறான்.


மரங்களின் வேர்கள் ஒன்றோடொன்று இணைந்து ஊட்டச்சத்துகளை பகிரும் மைக்கோரிஷா வலையமைப்பு
மரங்களின் வேர்கள் ஒன்றோடொன்று இணைந்து ஊட்டச்சத்துகளை பகிரும் மைக்கோரிஷா வலையமைப்பு


சாதாரணமாக மனிதன் 70 முதல் 100 ஆண்டுகள் வரை மட்டுமே வாழ்கிறான். ஆனால் சில மரங்கள் நூற்றாண்டுகள், சில மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட உயிருடன் நிலைத்திருக்கின்றன.

அப்படியானால் மரங்கள் இவ்வளவு நீண்டகாலம் வாழ்வதன் உண்மையான காரணம் என்ன? இதற்கான பதிலை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் — அது மனிதனுக்கு ஒரு ஆழமான பாடமாகவும் மாறியுள்ளது.


மரங்களின் ஆயுட்காலத்தை தீர்மானிக்கும் காரணிகள்

மரங்களின் வாழ்க்கைக்காலம் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அவற்றில் முக்கியமானவை:

🌿 மரத்தின் இனமும் வகையும்

🌍 வளர்ந்துள்ள இடத்தின் மண் தன்மை

💧 நீர் மற்றும் சத்துக்களின் அளவு

☀️ தட்பவெப்ப நிலை

🦠 நோய்த்தாக்கங்கள் மற்றும் பராமரிப்பு           நிலை

இவை அனைத்தும் சேர்ந்து மரங்கள் எவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருக்கும் என்பதை தீர்மானிக்கின்றன.


விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உண்மையான ரகசியம்

முன்னர் விஞ்ஞானிகள், மரங்கள் தங்களுக்குத் தேவையான சத்துக்களை நிலத்தடியில் வேர்களின் மூலம் போட்டி போட்டு உறிஞ்சி வாழ்கின்றன என்று நம்பினர். ஆனால் கனடா விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆராய்ச்சி அந்த நம்பிக்கையை முழுமையாக மாற்றியது.

அவர்கள் கண்டுபிடித்தது — மரங்களின் வேர்களில் மைக்கோரிஷா (Mycorrhiza) எனப்படும் ஒரு வகை பூஞ்சைகள் (fungi) வாழ்கின்றன. இந்த பூஞ்சைகள் ஓர் மரத்திலிருந்து மற்றொரு மரத்துடன் தகவல் மற்றும் சத்துப் பாலம் அமைத்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று பகிர்ந்துகொள்கிறன.


மரங்கள் ஒன்றுக்கு ஒன்று எவ்வாறு உதவுகின்றன?

இந்த மைக்கோரிஷா பூஞ்சைகள் மரங்களுக்கிடையில் ஒரு பண்பாட்டு வலைப்பின்னல் (network) உருவாக்குகின்றன. இதன் மூலம் அவை பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்கின்றன.


சத்துக்களை பகிர்கின்றன:

ஒரு மரம் சத்துக் குறைவால் பலவீனமடைந்திருந்தால், அருகிலுள்ள ஆரோக்கியமான மரம் தன் வேர்களின் மூலம் அந்த மரத்திற்கு தேவையான சத்துக்களை அனுப்புகிறது.


நோய்த் தகவலை பகிர்கின்றன:

ஒரு மரம் நோய்த் தாக்கத்திற்கு உள்ளானால், அது ரசாயனச் சுரப்புகள் மூலம் அருகிலுள்ள மரங்களுக்கு எச்சரிக்கை அனுப்புகிறது —

“நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நீ கவனமாக இரு” என்ற தகவலை பகிர்கிறது. இதனால் நோய்த் தாக்கத்திலிருந்து முடியுமானவரை பாதுகாப்பாக இருக்கின்றன. 


இயற்கை மாற்றங்களை உணர்கின்றன:

வெப்பநிலை, மழை, காலநிலை மாற்றங்கள் போன்றவற்றையும் இந்த பூஞ்சை வலைப்பின்னல் மூலம் மரங்கள் ஒன்றுக்கொன்று பகிர்ந்து கொள்கின்றன.

இதனால் அவை ஒன்றுக்கொன்று துணை நின்று, இயற்கையின் சவால்களை எதிர்கொண்டு நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றன.


மரங்களிடம் மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

மனிதன் “எல்லாம் எனக்கே சொந்தம்” என்ற சுயநல எண்ணத்துடன் வாழ்கிறான். அவன் பணம், உணவு, நீர், பொருள் ஆகியவற்றை தன் வசத்தில் வைத்துக்கொள்வதிலேயே விருப்பம் காண்கிறான்.

ஆனால் மரங்கள் அப்படியல்ல. அவை பகிர்ந்து, உதவி செய்து, ஒற்றுமையுடன் வாழ்கின்றன. அதனால்தான் மரங்கள் நூற்றாண்டுகளாகவும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவும் பூமியில் நிலைத்திருக்கின்றன.

மனிதன் மரங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம் இதுதான் — ஒற்றுமையுடன் வாழ்வது, பகிர்ந்து உதவுவது, அன்பை வெளிப்படுத்துவது. மனிதனும் இதைப் போல பகிர்ந்து, அன்புடன், ஒற்றுமையுடன் வாழ கற்றுக்கொண்டால், அவனுடைய வாழ்க்கையும் மரங்களின் போல் நீண்ட, நிம்மதியான, நிறைவானதாக இருக்கும்.

"ஒற்றுமையும் பகிர்வும் தான் வாழ்க்கையின் உண்மையான வேர்கள்.”

Comments

Popular posts from this blog

புத்தகம் படித்தால் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலையா? (read book no jail)

ஏரோப்பிளேன் முதல் சைக்கிள் வரை கடித்துச் சாப்பிட்டு உணவாக்கிய அதிசய மனிதர்

சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா? உண்மையான விஞ்ஞான விளக்கம் இதோ!