ஏரோப்பிளேன் முதல் சைக்கிள் வரை கடித்துச் சாப்பிட்டு உணவாக்கிய அதிசய மனிதர்

பொதுவாக மனிதர்கள் எல்லோரும் வாய்க்கு உருசியாகவும் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் அல்லது சத்துமிக்கதுமான உணவுகளை உட்கொள்வதையே நாம் அறிந்திருப்போம் அது சாதாரணமானதாகும். ஒருசிலர் கொடிய நஞ்சுகொண்ட உயிரினங்கள் அல்லது புச்சி புளுக்கள் அல்லது வேறு ஏதேனும் உணவுகளை உண்பதையும் அறிந்திருப்போம். ஆனால் இந்த மனிதரோ நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொருட்களை எல்லாம் உண்டு தனது பசியைத் தீர்த்துக்கொண்டதோடு ஆரோக்கியமாகவும் வாழ்ந்திருக்கின்றார். குழந்தைகள் சிறுவயதிலிருந்தே காண்பதை எல்லாம் கையால் பிடித்து அதைக் கடிக்கவே விரும்புவர். ஆனால் காலப்போக்கில் அந்தப் பழக்கத்திலிருந்து மாறிவிடுவார்கள். அவ்வாறு மாறாமல் அதே பழக்கம் ஒருவரிடம் தீவிரமாகக் காணப்பட்டால் அப்பழக்கத்தை அல்லது அந்தச் செயலை மருத்துவ உலகம் ஒருவித மன நோய் என்று வரையறை செய்கின்றது. இந்நோய் இருப்பவர்களுக்கு காண்பதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். எதைக் கண்டாலும் “இன்னைக்கு ஒரு புடி எல்லாரும் வாங்க” என்பதுபோல் தோன்றுமாம். இந்நோயின் பெயர் “பிகா“ (pica Disorder) என்பதாகும். இந்நோய் உள்ளவர்கள் மண், சீமேந்து, கல், காகிதம...