சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா? உண்மையான விஞ்ஞான விளக்கம் இதோ!

சிக்கன் சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்குமா? உண்மையான விஞ்ஞான காரணங்கள் மற்றும் ஆயுர்வேத விளக்கத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்.

 

சிக்கன் சாப்பிடும்போது உடலில் வெப்பம் ஏற்படும்


உடல் சூடு எப்போது ஏற்படுகின்றது?

உடல் சூடு ஏற்பட பல காரணங்கள் உண்டு என்று கூறப்படுகின்றது. அவ்வாறான சில காரணங்களைப் பார்ப்போம்.

  • சரியாக சாப்பிடவில்லை என்றால் உடல் சூடு அதிகரிக்கும்
  • சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடவில்லை என்றாலும் உடல் சூடு அதிகரிக்கும்
  • எண்ணெய்யில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் உடல் சூடு அதிகரிக்கின்றது.
  • இரவில் அதிக நேரம் கண்விழித்துக்கொள்வதாலும் உடல் சூடு அதிகரிக்கும்.
  • மனப்பதட்டம், பரபரப்பு டென்சன் என்பவற்றாலும் உடல் சூடு அதிகரிக்கும்.

பல உணவுகள் ஆயுள்வேதத்தில் உடல் சூட்டை அதிகரிப்பதாக கருதப்படுகின்றது. அந்த வகை உணவுகளில் கோழி இறைச்சி அதாவது நாட்டுக்கோழி அல்லது பிறாய்லர் சிக்கன் இறைச்சியும் உடல்சூட்டை அதிகரிப்பதாகக் கூறப்படுகின்றது.

சிக்கன் ஒரு உயர் புரதன் கொண்ட உணவாகும்.  இதை செரிமானம் செய்யும்போது உடல் அதிகமான சக்தியைப் பயன்படுத்துகின்றது. இதை ”Diet – Induced Thermogenesis” அல்லது  “Specific Dynamic Action (SDA)” என அழைக்கின்றனர். இதன் காரணமாக உடல்வெப்பம் தற்காலிகமாக சிறிது அதிகரிக்கலாம். ஆனால் இந்த வெப்ப அதிகரிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவு அல்ல.


அப்படி என்றால் ஏன் சிக்கன் உடல் சூட்டை அதிகரிப்பதாக கூறப்படுகின்றது?

சிக்கன் அதிகம் சாப்பிடுபவர்களில் பெரும்பாலனவர்களுக்கு மலச்சிக்கலும் ஆசனவாய் எரிச்சல் போன்ற உபாதைகள் அதிகம் ஏற்படுகின்றது. ஏனெனில் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் நார்ச்சத்துக் குறைபாடாகும். சிக்கன் சாப்பிடுவர்கள் அதிக காரம் மற்றும் மசாலாக்களுடன் சாப்பிடுகின்றனர்.  ஆனால் இலைக்கறிகள் கீரைகள் அதிகம் எடுத்துக்கொள்வதில்லை. சிக்கன் எடுக்கும் அளவுக்குரிய சரிபாதி அளவு கீரை வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் முழுவதுமாக சிக்கன் எடுத்துக்கொள்வதும் காரணமாக இருக்கலாம். அவ்வாறு கீரை வகைகளை எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் மற்றும் ஆசனவாய் எரிச்சல் சார்ந்த பிரச்சினைகள் தடுக்கப்படுகின்றது.

ஆகவே உங்கள் உடல் நிலை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பொறுத்து சிக்கன் சாப்பிடும் அளவை சமநிலைப்படுத்துவதுடன் அதிகளவில் கீரை வகைகளையும் சேர்த்துக்கொள்வது சிறந்தது.


உங்களுக்கு உடல் வெப்பம் அதிகமிருந்தால் கீழே உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் வெப்பம் குறையும். 

  • போதுமான  அளவு அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொள்ளுங்கள். உடல் சூட்டைக் குறைப்பதில் தண்ணீர் பிரதான பங்களிப்புச் செய்கின்றது. 
  • உடல் வெப்பத்தைத் தணிப்பதில் இளநீருக்கு நிகர் எதுவும் இல்லை. ஆகவே அதிகம் இளநீர் குடியுங்கள். 
  • இரவு சிறிது அளவு பாதாம் பிசினை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் பருகுங்கள் உடல் சூடு குறையும். 
  • அதிகம் மோர் கரைத்துக் குடியுங்கள். இது உடல் சூட்டைக் குறைப்பதுடன் நல்ல பக்டீரியாக்களை உடலில் வளரச் செய்யும். ஆரோக்கியம் மேம்படும். 
  • தினமும் வெந்தயத்தைச் சாப்பிடுவதால் உடல் வெப்பமானது எளிதில் தணியும். 
  • வெள்ளரி, தர்ப்புசணி அல்லது முலாம் பழம் சாப்பிடுங்கள். 
  • இரவில் சோற்றில் நீர் ஊற்றி வைத்து காலையில் எழுந்ததும் அச்சோற்றை கரைத்து உண்பதும் சிறந்த பலனளிக்கும். 




Comments

Popular posts from this blog

புத்தகம் படித்தால் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலையா? (read book no jail)

ஏரோப்பிளேன் முதல் சைக்கிள் வரை கடித்துச் சாப்பிட்டு உணவாக்கிய அதிசய மனிதர்